மணவாளக்குறிச்சியில் நடந்த ஆயுதபூஜை விழா காட்சிகள்

மணவாளக்குறிச்சியில் நடந்த 
ஆயுதபூஜை விழா காட்சிகள்
25-10-2012
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் அனைத்து வாகன ஓட்டுநர், உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய 25-வது ஆண்டு கலைமகள் மற்றும் ஆயுத பூஜை விழா 23 மற்றும் 24-ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.  முதல் நாள் நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டிகளும், பக்திகானம் நிகழ்ச்சியும் நடந்தது. 2-ம் நாள் நிகழ்ச்சியில் மாலை 6.30 மணி அளவில் நவரச நாயகன் கவிஞர் ஸாய் பாபு வழங்கிய குமரி சிற்றிவாய்ஸ் ஆர்கெஸ்ட்ராவின் "மாபெரும் மெகா ஸ்டார் மெல்லிசை விருந்து" நிகழ்ச்சி நடந்தது.
மெல்லிசை நிகழ்ச்சி காட்சிகள்
ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சியின் இடைவேளையில் வாகன ஓட்டுநர்களுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றியாளர்களுக்கு பரிசுகளை ரமேஷ் எண்டர்பிறைசஸ் உரிமையாளர் தங்கராஜ் வழங்கினார். நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் 
விழா நிகழ்ச்சிகளை தர்மலிங்கம், ரவிசந்திரன், நிஜாம், செல்வேந்திரன், கணேசன், ஹரிஹரன், ஜவஹர்லால் போன்ற உறுப்பினர்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி 

Post a Comment

Previous News Next News