மணவாளக்குறிச்சியில் பக்ரீத் பெருநாள்
கொண்டாடும் நாள் அறிவிப்பு
25-10-2012
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகை பக்ரீத் பெருநாளாகும். இந்த பண்டிகை இந்தியா முழுவதும் வருகிற சனிக்கிழமை (27-10-2012) அன்று கொண்டாடப்படும் என்று தமைமை ஹாஜி அவர்கள் அறிவித்திருந்தார். அதேபோல் தமிழக அரசு தலைமை ஹாஜியும் 27-ம் தேதி அன்று பக்ரீத் கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கேரளாவில் நாளை (26-10-2012) வெள்ளிகிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி, குளச்சல், திருவிதாங்கோடு, இரவிபுதூர்கடை, மார்த்தாண்டம், கோட்டார் உள்பட பல பகுதிகளில் நாளை (26-ம் தேதி) பக்ரீத் கொண்டாடப்படுகிறது.
27-ம் தேதி சனிக்கிழமை அன்று மணவாளக்குறிச்சி, தக்கலை, ஆளூர், நாகர்கோவில் சில பகுதிகளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல தொழுகை பள்ளிவாசலில் இதற்கான அறிவிப்பை மணவாளக்குறிச்சி முஹல்லம் இன்று வெளியிட்டிருந்தது. பக்ரீத் பண்டிகை பெருநாள் சிறப்பு தொழுகை காலையில் பெண்களுக்கு 7 மணிக்கும், ஆண்களுக்கு காலை 9 மணிக்கும் நடைபெறுகிறது.
Tags:
மணவை செய்திகள்