சாலையில் தேங்கிய மழைநீர்

மணவாளக்குறிச்சி, ஆறான்விளை 
சாலையில் தேங்கிய மழைநீர்
16-10-2012
மணவாளக்குறிச்சி சின்னவிளை கடற்கரை செல்லும் சாலையில் முஸ்லிம் தொழுகை பள்ளிவாசல் அமைந்துள்ளது. இதன் அருகில் ஆறான்விளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளிதெரு, காணவிளை, கோவில் விளாகம், ஆறான்விளை, சாலத்திவிளை, சுனாமி குடியிருப்பு போன்ற பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் சுமார் 500 குடும்பத்திற்கும் மேல் வசித்து வருகின்றனர். இந்த சாலை வழியாக பள்ளிவாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. 

இந்நிலையில் கடந்த இரு நாள்களாக ஓரளவு மழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும், நேற்று (15-ம் தேதி) காலை வேளையிலும் நல்ல மழை பொழிந்தது. இதனால் இந்த சாலையில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இந்த சாலை சில மாதங்களுக்கு முன்பு தான் சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாலையில் மழை நாட்களில் மழை நீர் அதிக அளவில் தேங்கி விடுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சைக்கிளில் செல்பவர்கள் பள்ளம் எது என தெரியாமல் கிழே விழும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த சாலை குறுகிய சாலை என்பதால் சிறிது மழை பெய்த உடனே தண்ணீர் நிரம்பி விடுகிறது. மேலும் தண்ணீர் செல்ல மாற்றுப்பாதையும் இல்லை. இதை சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் சரிசெய்வார்களா என இப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Post a Comment

Previous News Next News