மணவாளக்குறிச்சியில்
இலவச கண்சிகிச்சை முகாம்
பேரூராட்சி தலைவி தொடங்கி வைத்தார்
06-10-2012
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு மையமும், ஜெ.எம்.சாரிட்டபிள் டிரஸ்டும், டாக்டர் பெஜான்சிங் கண் மருத்துவமனையும், மணவாளக்குறிச்சி பேரூராட்சியும் இணைத்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மணவாளக்குறிச்சி பேரூராட்சி அலுவலத்தில் வைத்து நடைபெற்றது. மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா மருத்துவ முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் பெர்பெற்றி டெறன்ஸ் லியோன், கவுன்சிலர் ஸ்ரீகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கண்புரை நோயாளிகள் கண்டறியப்பட்டு லென்ஸ் இலவசமாக பொருத்தப்பட்டது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்படவர்களுக்கும், விழித்திரை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கர் லியோன், செரின் ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 300-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மணவாளக்குறிச்சி வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Tags:
மணவை செய்திகள்