மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லத்தில்
8 பேர் புனித ஹஜ் பயணம்
07-10-2012
இஸ்லாம் நிறுவியுள்ள 5 தூண்களில் இறுதியானதும், மிக முக்கியமானதுமான ஹஜ் பயணம் ஆகும். அதன்படி உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியம் மக்கள் இந்த வருடமும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லத்தை சார்ந்த 8 பேர் ஹஜ் பயணம் செய்கின்றனர். முஹல்ல தலைவர் எம்.பஷீர் மற்றும் அவர்களின் மனைவி, முன்னாள் ஜமாஅத் தலைவர் ஜமால் முஹம்மது மற்றும் அவர்களின் மனைவி யாஸ்மின், மர்ஹும் முஹம்மது நூஹ் அவர்கள் மனைவி ஹாஜிம்மா. ரொஹியா பீவி, ஆசிரியர் சாஹுல் ஹமீது, நாகர்கோவிலில் வசிக்கும் முஹல்லத்தை சேர்ந்த அப்துல் மஜீது மற்றும் அவர்களின் மனைவி ஆகிய 8 பேர் இந்த வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஜமாஅத் தலைவர் பஷீர் |
இவர்களில் மணவாளக்குறிச்சி முஸ்லிம் ஜமாஅத் தலைவர் பஷீர் மற்றும் அவருடையம் மனைவி ஆகியோர் 05-ம் தேதி வெள்ளிகிழமை புறப்பட்டனர். அன்று மாலை 5.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து குமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை சென்று அங்கிருந்து மெக்கா செல்கின்றனர். மற்றவர்கள் வருகிற 15-ம் தேதி புறப்படுகின்றனர். அவர்களும் சென்னை சென்று அங்கிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.