முட்டத்தில்
நாட்டு வெடிகுண்டு தயாரிக்க மருந்து 'சப்ளை' செய்த பெண் கைது
12-10-2012
முட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி இரண்டு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டது. பங்கு பேரவை தேர்தல் தொடர்பாக முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது. இதில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதனால் இருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பையும் சார்ந்த 25-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ஏப்ரல் 5-ம் தேதி முட்டம் கடலில் நின்ற விசைப்படகில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தது.
பின்னர் 6-ம் தேதி கடலில் நின்று கொண்டிருந்த 3 விசைப்படகில் போலீசார் சோதனை இட்டனர். அப்போது அந்த 3 படகில் இருந்து 60-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக முட்டத்தில் நாட்டு வெடிகுண்டி 'சப்ளை' செய்தது யார்? என்று தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் மோதல் தொடர்பாக முட்டத்தி சேர்ந்த சசியோன் கைது செய்யப்பட்டார். அவருடைய வாக்குமூலத்தில் அழிக்கால் ஆறுதெங்கன்விளையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி மாரி (வயது 56) என்பவரிடம் இருந்துதான் நாட்டு வெடிகுண்டு தயார் செய்வதற்கு மருந்து வாங்கியதாக குறிப்பிட்டு இருந்தார். இதுபற்றி மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விசாரணை நடத்தி வெடிமருந்து 'சப்ளை' செய்த மாரியை கைது செய்தார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்