மணவை செய்திகள்

மணவாளக்குறிச்சியில்
பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
30-09-2012
மணவாளக்குறிச்சி, கடியப்பட்டணம் அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மணவாளக்குறிச்சியில் நடந்தது. மணவாளக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயன் தலைமை தாங்கினார். நாட்டுநல பணி திட்ட அலுவலர்கள் அல்போன்ஸ்மேரி, ஜாய்ஸ்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் சின்னவிளை, ஆரான்விளை, தருவை, மணவாளக்குறிச்சி, மிசிட்விளை, தேங்காய்கூட்டுவிளை போன்ற பகுதிகளில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்ற கோஷம் போட்டு சென்றனர். ஊர்வலத்தில் மணவாளக்குறிச்சி மேல்நிலைப்பள்ளி, சிறுமலர் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மணவாளக்குறிச்சியில்
குப்பைமேடாகும் அந்தி சந்தை?
30-09-2012
மணவாளக்குறிச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சந்தை. இந்த சந்தை தினமும் மாலை வேளையில் கூடுவதால் அந்தி சந்தை என அழைக்கப்படுகிறது. இங்கு மாலை வேளை மட்டுமின்றி காலை வேளையிலும் சந்தை கூடுவதால் நாள் முழுவதுமே இந்த சந்தை மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறது. சந்தையை சுற்றிலும் மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. 
சந்தையில் அமைந்துள்ள மீன்கடைகள் பகுதி
இங்கு காலை வேளையில் முட்டம், கடியப்பட்டணம், சின்னவிளை மற்றும் பெரியவிளை பகுதிகளில் இருந்து அதிக அளவில் மீன்கள் கொண்டு வந்து விற்கப்படுகின்றன. மேலும் சந்தையில் காய்கறி கடைகள், தேங்காய் கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் போன்றவையும் தற்காலிகமாக அமைக்கப்படுகிறது. இந்த கடைகளுக்கு தீர்வை மூலம் பணம் வசூலிக்கப்படுகிறது. இதில் மீன் விற்பனை செய்ய தனியாக இடம் ஒதுக்கப்படுள்ளது. மற்ற அனைத்து கடைகளும் மீன்கடையை சுற்றி அமைக்கப்படுகிறது.
குப்பைகள் குவியும் இடம்
இதனால், தினமும் அதிக அளவில் குப்பைகள் சந்தையில் குவிகிறது. இந்த குப்பைகளை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் தினமும் சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் வாரத்திற்கு ஒருமுறை மீன்விற்கும் பகுதிகள் அனைத்தும் தண்ணீர் அடித்து சுத்தம் செய்யப்படுகிறது. ஆனாலும், கடைகள் வைத்திருப்பவர்கள் தங்களுடைய குப்பைகளை ஒரு இடத்தில் வைக்காமல் சந்தையின் ஏதாவது ஒரு இடத்தில் விட்டு செல்கின்றனர். மேலும் மீன்விற்பவர்கள் மீன் கழிவுகளை கண்ட இடத்தில் விட்டு செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. மழைகாலங்களில் சந்தையில் நடப்பதற்கே மிக அருவருப்பாக இருக்கிறது.

பேரூராட்சி பணியாளர்கள் தினமும் சுத்தம் செய்தாலும், மீன்விற்பவர்களும், கடைக்காரர்களும் பொறுப்புடன் செயல்பட்டால், மணவாளக்குறிச்சி சந்தை சுகாராதத்துடன் விளங்கும்.

மணவாளக்குறிச்சியில்
அமைக்கப்பட்டுவரும் பஸ் நிலையத்தில் 
புதிய நுழைவு வாயில்
30-09-2012
குமரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் பெரூராட்சியாக விளங்குவது மணவாளக்குறிச்சி பேரூராட்சி ஆகும். இங்கு பஸ் நிலையம் இல்லை என்ற குறை இங்குள்ள மக்களிடையே நீண்ட காலமாக இருந்து வந்தது. தற்போது அந்த குறை ஓரளவு நீக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் இருந்த பஸ் நிலையம், தற்போது மீண்டும் புது பொலிவுடன் அமைக்கப்பட்டு வருகிறது. 
பழைய பேருந்து நிலைய நுழைவாயில்
பேருந்து கண்காணிப்பு அலுவலர் அலுவலம், புதிய நிழலகம், நவீன கழிப்பறைகள் போன்றவைகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் பேருந்து நுழைவாயில் பில்லர் அமைத்து பெரிய அளவில் கட்டப்பட்டு வருகிறது. முன்னர் இருபக்கமும் இரு கம்பிகள் நடப்பட்டு "மணவாளக்குறிச்சி பேருந்து நிலையம்" என்ற ஒரு போர்டு மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. இந்த வேலைகள் மிக துரிதமாக செயல்பட்டு வருகிறது. விரைவில் இந்த பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக கட்டப்படும் நுழைவாயில்



Post a Comment

Previous News Next News