வி.ஏ.ஓ. தேர்வு எழுதச் சென்றபோது விபத்தில் சிக்கிய வெள்ளிசந்தை மாணவி

வி.ஏ.ஓ. தேர்வு எழுதச் சென்றபோது விபத்தில் சிக்கிய 
வெள்ளிசந்தை மாணவி: தேர்வு எழுத முடியாததால் கண்ணீர்
30-09-2012
வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரல் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் ஸ்டேன்லி (வயது 34). இவரது மனைவியின் தங்கை மேரி சுகிதா (22). எம்.காம். படித்து வருகிறார். இவர் வி.ஏ.ஓ. தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தார். நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத மேரி சுகிதாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்காக இன்று காலை மேரி சுகிதாவை, ஜார்ஜ் ஸ்டேன்லி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு நாகர்கோவில் நோக்கி வந்தார்.
பாம்பன்விளையில் வந்து கொண்டு இருந்தபோது எதிரே 2 பெண்கள் ஒரு மொபட்டில் வந்தனர். எதிர்பாராதவிதமாக அந்த மொபட்டும், ஜார்ஜ் ஸ்டேன்லியின் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். அந்த வழியாக காரில் வந்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த டாக்டர் சுனிதா தனது காரில் அவர்களை ஏற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு ஜார்ஜ் ஸ்டேன்லி மற்றும் மொபட்டில் வந்த 2 பெண்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வி.ஏ.ஓ. தேர்வு எழுதச் சென்ற மேரி சுகிதா லேசான காயத்துடன் தப்பினார். எனவே அவர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விபத்தில் சிக்கியதால் அவரால் வி.ஏ.ஓ. தேர்வு எழுத முடியவில்லை. இதனால் கண்ணீர் வடித்தபடி வீட்டுக்கு சென்றார்.

Post a Comment

Previous News Next News