மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் ரம்சான் பெருநாள் விழா விளையாட்டு போட்டிகள் நடந்தன


ரம்சான் சிறப்பு செய்திகள்


மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில்
ரம்சான் பெருநாள் விழா
விளையாட்டு போட்டிகள் நடந்தன
20-08-2012
மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் ரம்சான் பெருநாள் சிறப்பு நிகழ்வாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதை முன்னிட்டு 19-08-2012 அன்று மாலை 5 மணி அளவில் மாபெரும் வடம் இழுத்தல் போட்டி நடந்தது. 

வடம் இழுத்தல் போட்டியில் ஒரு அணி அப்துல் மஜீது தலைமையிலும், இன்னொரு அணி சரபுதீன் தலைமையிலும் கலந்து கொண்டன. இந்த போட்டியை இஸ்லாமிய இளைஞர் பேரவை கௌரவ தலைவர் சபீக் ரகுமான் தொடங்கி வைத்தார். இதில் அப்துல் மஜீது அணி 2-1 என்ற புள்ளியில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அப்துல் மஜீது அணி சேர்ந்தவர்கள் மக்கள் பாராட்டினர்.
வடம் இழுத்தல் வீடியோ

தொடர்ந்து இளைஞர்களுக்கான கபடி போட்டி நடந்தன. இந்த போட்டியை முன்னாள் இஸ்லாமிய இளைஞர் பேரவை தலைவர் சலாவுதீன் தொடங்கி வைத்தார். இந்த போட்டியை மொதுமக்கள் கண்டு களித்தனர்.

கபடி போட்டி காட்சிகள்


கபடி போட்டி வீடியோ




Jobs from Indeed

Post a Comment

Previous News Next News