கல்லடிவிளை ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில்
சித்திரை திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சிகள்
13-05-2012
கல்லடிவிளை ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில் சித்திரை திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சிகள் 12-05-2012 அன்று நடைபெற்றது. காலை 4.30 மணிக்கு சுரபாதமும், 5 மணிக்கு பக்தி கானங்களும், 6.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. காலை 7 மணிக்கு பொங்கல் வழிபாடும் 7.30 நாதஸ்வரமும், தொடர்ந்து 8 மணிக்கு செண்டைமேளமும் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு ஸ்ரீ தம்புரான் சரித்தர பாட்டு பாடப்பட்டது. இதனை கொல்லங்கோடு ஹிந்து தண்டான் சமுதாய மாநில துணைத்தலைவர் திரு. சசி வழங்கினார்.
துலாபார நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி |
பொங்கலுக்கான ஏற்பாடுகளை செய்யும் பெண்கள் |
பொங்கல் அடுப்பு பூஜை செய்யப்படுகிறது |
பொங்கல் அடுப்பு தீ ஏற்றப்படுகிறது |
திருவிழாவுக்கான சிறப்பு பன்னீர், பொரி கடை |
ஸ்ரீ தம்புரான்மார்களுக்கு பூப்படைக்கப்படுகிறது |
பொங்கல் வீடியோ - 1
பொங்கல் வீடியோ - 2
திருவிழா காணவந்த பக்தர்கள்
வில்லிசை கச்சேரி
9.30 மணிக்கு ஸ்ரீ தம்புரான் கதை பாட்டு பற்றிய வில்லிசையும் 10 மணிக்கு ஸ்ரீ தம்புரான்மார்களுக்கு பூப்படைப்பு ஒருக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பகல் 12.30 மாபெரும் அலங்கார தீபாராதனையும் நடந்தது.
நிகழ்ச்சி விளம்பரதாரர் "தேவ் ஸ்டுடியோ, மணவை" |
கல்லடிவிளை அருள்மிகு ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில் நிகழ்ச்சி செய்தி மற்றும் படங்கள் உதவி சிறப்பு செய்தியாளர் மன்சூர், மணவாளக்குறிச்சி
Tags:
Events