திருவிதாங்கோடு முஸ்லீம் கலை கல்லூரியில்
இருநாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது
12-02-2012
திருவிதாங்கோடு முஸ்லீம் கலை கல்லூரியில் இருநாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கை தமிழ்த்துறை மற்றும் இஸ்லாமிய ஆய்வு மையம் நடத்தியது. இதில் 'சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கு பிப்ரவரி மாதம் 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடந்தது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் எம்.மீரான் மைதீன் துவக்க உரையாற்றிய காட்சி |
எழுத்தாளர் பொன்னீலன் பேசிய காட்சி, அருகில் எழுத்தாளர் களந்தை பீர் முகம்மது |
கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் |
அதைதொடந்து பகல் 11.30 மணிக்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி நெறியாளர் பேராசிரியர் மு.அப்துல் சமது, சென்னை, எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர்.ஐ.எஸ். பர்வீன் சுல்தானா குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் நட.சிவகுமார், திருமங்கலம் பி.கே.என்.கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் வே. பொன்ராஜ், பிர்தவ்ஸ் இராஜகுமாரன், ஹசன் மைதீன், அன்வர் பாலசிங்கம், ரோஜா குமார், ஹெச்.ஜி.ரசூல், எழுத்தாளர் பொன்னீலன், காலச்சுவடு ஆசிரியர். கண்ணன், பண்பாட்டு ஆய்வாளர். வி.சிவராமன், குறும்பட இயக்குநர். எஸ்.ஜே.சிவசங்கர், ஜி.எஸ்.தயாளன் மற்றும் பல்வேறு படைப்பாளிகள் கலந்து கொண்டனர். முதல் நாள் நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை நடந்தது. நிகழ்ச்சியில் பல ஆய்வாளர்களும், பேராசிரியர்களும், மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் (11.02.2012) கருத்தரங்கில் நெறியாளராக கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் இருந்தார். எழுத்தாளர் அன்வர் பாலசிங்கம் 'அடித்தள முஸ்லிம்களின் வாழ்வை எழுதும் எழுத்து' என்ற உரையில் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி பேராசிரியர் முகம்மது ரபீக், கேரளா யுவானியோஸ் கலை கல்லூரி பேராசிரியர் முனைவர். எஸ்.அமிலெட் மதிலா, இலட்சுமிபுரம் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் கிளாடிஸ் சுசிலா ஆகியோர் கலந்து கொண்டனர். இரண்டு நாள் நிகழ்ச்சியையும் எழுத்தாளர் எம். மீரான் மைதீன் ஏற்பாடு செய்திருந்தார்.
Tags:
Events