நாகர்கோவில் பெண்கள் கிறித்தவ கல்லூரியில் நாவலாசிரியை மலர்வதியின் "தூப்புக்காரி" நாவல் வெளியீட்டு விழா

நாகர்கோவில் பெண்கள் கிறித்தவ கல்லூரியில்
நாவலாசிரியை மலர்வதியின்
"தூப்புக்காரி"
நாவல் வெளியீட்டு விழா 

12-02-2012
   மார்த்தாண்டம் அருகே உள்ள வெள்ளிகோடு பகுதியை சேர்ந்த திரு.எலியாஸ் மற்றும் ரோணிக்கம் தம்பதியின் புதல்வி 'மலர்வதி' தன்னுடைய முதல் நாவலான "காத்திருந்த கருப்பாயி" என்ற நாவலை 2008-ம் ஆண்டு வெளியிட்டார். இந்த நாவல் எழுத்தாளர் பொன்னீலன், வரலாற்று ஆய்வாளர் தக்கலை பென்னி உள்ளிட்ட பல படைப்பாளிகளின் பாராட்டை பெற்றது. தன்னுடைய இரண்டாவது நாவலான 'தூப்புக்காரி' என்ற நூல் வெளியீட்டு விழா நாகர்கோவில் பெண்கள் கிறித்தவ கல்லூரியில் வைத்து 11-02-2012 அன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

     முதல் நிகழ்வாக களரி பண்பாட்டு மையத்தினரின் பாடலுடன் தொடங்கியது. பின்னர் நாவல் ஆசிரியையின் தாய் ரோணிக்கம் அவர்கள் குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து பொன்னீலன், தூத்துக்குடி வா.ஊ.சி. கல்லூரி பேராசிரியை மெர்சி லதா ஆகியோர் குத்து விளக்கேற்றனர். அனல் பதிப்பகம் பணி.டென்சிங் வரவேற்று பேசினார். தொடர்ந்து முதற்சங்கு இலக்கிய இதழ் ஆசிரியர் சிவனி சதீஷ் வாழ்த்துரை வழங்கினார்.
புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் 
எழுத்தாளர் பொன்னீலன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார் 
நாவலாசிரியையின் தாய் ரோணிக்கம் நூலை வெளியிடுகிறார் 
நாவலாசிரியர் மலர்வதி எழுத்தாளர் பொன்னீலனுக்கு பொன்னாடை
அணிவிக்கிறார் 
எழுத்தாளர் பொன்னீலன் மலர்வதிக்கு பொன்னாடை அணிவிக்கிறார் 
"தூப்புக்காரி" நாவலை பெற்றுக்கொள்ளும் பிரபலங்கள் 
நாவலாசிரியையின் தாய் ரோணிக்கம் கவுரவிக்கப்படுகிறார் 
மலர்வதி ஏற்புரை வழங்கும் காட்சி 
விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள்
மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் 
விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் 'கலாசுரன்' (வலமிருந்து)
வரலாற்றாளரும், எழுத்தாளருமான தக்கலை பென்னி அவர்கள் ,
"மணவைமலர்" சலீம் 
    பின்னர் "தூப்புக்காரி" என்ற நாவல் நூலாசிரியையின் தாய் ரோணிக்கம் அவர்களால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் நூல் ஆய்வுரை வழங்கினார். தூத்துக்குடி வா.ஊ.சி. கல்லூரி பேராசிரியை மெர்சி லதா, வெள்ளிக்கோடு ஊர் துணைத்தலைவர் ஆன்றனி ஜோ,  தத்துவம் இலக்கிய  ஆய்வாளர் மற்றும் விமர்சகர் எஸ்.கே.கங்கா, அனல் இயக்குநர் மற்றும் சட்டபயிற்சியாளர் பணி.எடிசன் முரசு சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தலைமையுரை அனல் தாஸ் அவர்கள் வழங்கினார். புலவர் செல்லம், கவிஞர் தேவதாசன், ஒளிவெள்ளம் மாத இதழ் ஆசிரியர் பெதலீஸ், ஆய்வாளர் தக்கலை பென்னி, என்.ஐ கல்லூரி பேராசிரியர் முனைவர். டெல்பின் ராஜா, ஆனந்த். ஆஷா போஸ்கோ மற்றும் கலாசுரன்  போன்றோர் முன்னிலை வகித்தனர். தூப்புக்காரி" நாவலாசிரியை மலர்வதி ஏற்புரை வழங்கினார்.
"தூப்புக்காரி" நாவல் 

ஆசிரியரை பற்றி

       "தூப்புக்காரி" நூல் ஆசிரியை மலர்வதி தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.  2008-ல் வெளிவந்த இவரின் முதல் நாவலான "காத்திருந்த கருப்பாயி" நல்ல வரவேற்பை பெற்றது. இவருடைய இரு நாவல்களுமே சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வாழ்க்கை முறையையும், அதனால் ஏற்படும் அவமானங்களையும், இன்னல்களையும் மிக அழகான முறையில், வழக்கு மொழியில், எளிய நடையில் காண்பிக்கப்பட்டுள்ளது. "தூப்புக்காரி" நாவலுக்கு நாவலாசிரியர் பொன்னீலன் மற்றும் நாவலாசிரியர் மேலாண்மை பொன்னுசாமி ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளார்கள். இவர், தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகளே நாவல் எழுத உத்வேகப்படுத்தியது எனவும், தன்னுடைய 14-வது வயதிலேயே எழுத்துப் பணியை ஆரம்பித்து விட்டதாகவும் கூறினார்.

1 Comments

  1. THOOPUKAARI is a wonderful novel,
    MALARVATHI has done the best job...!!

    samuthaayathil nadakum avalangalai miga miga elimaiyaayi sitharikirathu, intha puthinam,,,

    MALARVATHI aunty,
    miga valimaiyaana vilipunarvai thantha ungalukku en manamaarntha nantri....

    ReplyDelete
Previous News Next News