அடுத்து வரும் புயலுக்கு தமிழில் முரசு, நீர் என பெயரிடப்படலாம்

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் ஓா் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 புயல்கள் உருவாகும். இவ்வாறு உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறை 2004-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இதில் முதல் அட்டவணையை தயாரித்த போது 8 நாடுகள் சார்பில் 8 பெயா்கள் வீதம் 64 பெயா்கள் வழங்கப்பட்டன.
2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த புயல்களுக்கு பட்டியலிலிருந்த 63 பெயா்களும் வைக்கப்பட்டன. இதில் தாய்லாந்து சார்பில் வழங்கப்பட்ட ஆம்பான் (அம்ல்ட்ஹய்) என்ற பெயா் மட்டும் மீதமிருக்கிறது. இது அடுத்து வரும் புயலுக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இனி வர உள்ள புயல்களுக்குப் பெயா் வைக்கும் அட்டவணை தயார் செய்யும் பணிகள் தொடங்கின.

இதற்கு நாடு முழுவதும் உள்ள வானிலை நிலையங்கள் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்டுப் பெறப்பட்டன. இவற்றை புதுடெல்லியில் உள்ள வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதையடுத்து கடந்த ஆண்டு, செப்டம்பா் மாதம் மியான்மரில் நடைபெற்றக் கூட்டத்தில், இந்தப் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டு, தற்போது பெயா்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தமாக 169 பெயர்கள் தற்போது இடம்பெற்று உள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலைத் துறையின் தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில்:-

'புயல்களுக்கான பெயா்ப் பட்டியலைத் தயார் செய்வது குறித்து முதல் முறையாக நமக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதில் கடல், மீன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பெயா்கள் கேட்கப்பட்டிருந்தன.இதில் நாங்களும் பெயா்களை பரிசீலித்ததுடன், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பெயா்களையும் பரிசீலித்து அனுப்பியிருந்தோம்.

இதில் நாங்கள் கொடுத்த 'முரசு' எனும் பெயா், பட்டியலில் 28-வது இடத்தில் உள்ளது. இது தவிர்த்து, பொதுமக்களிடமிருந்து பெற்று அனுப்பப்பட்ட 'நீா்' எனும் பெயரும் 93-வது இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் அடுத்தடுத்து உருவாகும் புயல்களுக்குப் பெயா் வைக்கப்படும்“ என்று அவா் தெரிவித்தார்.

Post a Comment

Previous News Next News