குமரி மாவட்டத்தில் 51 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

குமரி மாவட்ட எல்லையில் உள்ள கேரளாவில் கடந்த மாதம் முதல் டெங்கு காய்ச்சல் நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
கேரளாவில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சல் பாதிப்பு குமரி மாவட்டத்தையும் தாக்கியது. இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் திருவனந்தபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வேலைக்காக சென்று வருகிறார்கள்.

அவர்கள் மூலம் டெங்கு காய்ச்சல் குமரி மாவட்டத்திலும் பரவியது. இதற்கு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிக்கும் பணியும் முடுக்கி விடப்பட் டது.

இதன் மூலம் குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லையென கூறப்பட்டது. ஆனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது.

அவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது அதில், ரத்த அணுக்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. இத்தகைய பாதிப்பு உள்ளோரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தால்தான் குணப்படுத்த முடியும். எனவே ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் டெங்கு சிகிச்சைக்கு என தனிவார்டு திறக்கப்பட்டது.

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டெங்கு காய்ச்சல் வார்டில் மட்டும் நேற்று வரை 15 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களை தவிர வெளி நோயாளிகளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று செல்கிறார் கள். இதுபோல தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் 6 பேர் உள்நோயாளியாக அனுமதிக் கப்பட்டுள்ளனர். இதுபற்றி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மதுசூ தனன் கூறும்போது, குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி களில் 51 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் நோய் வராமல் பாதுகாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று சுகாதாரப் பணிகளை பார்வையிட்டார்.

Post a Comment

Previous News Next News