ஜெயலலிதா மரணமடைந்ததை தொடர்ந்து அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி டெலிவிஷன்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் பலர் சோகத்துடன் பார்த்துவந்தனர்.
குளச்சல் நகர 22-வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் தலைவர் அசன்கண் என்ற கொடிக்கண் (வயது 68) என்பவரும் இன்று தனது வீட்டில் இந்த அஞ்சலியை சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனே அவரது மகன் முஸ்தாக் மற்றும் குடும்பத்தினர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Tags:
Surrounded Area