குளச்சலில் குவிந்த கொழிச்சாளை மீன்கள் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகள் உள்ளன. இதில் சில படகுகள் கேரளா, கர்நாடக மற்றும் குஜராத் கடல் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. மீதி படகுகள் குளச்சல் கடல் பகுதியில் மீன் பிடித்து வருகின்றன. ஒரு விசைப் படகு ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்து கரை திரும்புவது வழக்கம்.
நேற்று 20 விசைப்படகுகள் கரை திரும்பின. இதில் கொழிச்சாளை மீன்கள் அதிகமாக கிடைத்தது. இம்மீன்களை மீனவர்கள் துறைமுக ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். 50 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கொழிச்சாளை ரூ.550 முதல் ரூ.600 வரை விலை போனது. இம்மீன்களுக்கு வெளிமாவட்ட மீன் சந்தைகளில் மவுசு உள்ளதால் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். நேற்று குளச்சலில் கொழிச்சாளை அதிகமாக கிடைத்ததால் விசைப்படகினர் மகிழ்ச்சியடைந்தனர்.

Post a Comment

Previous News Next News