மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம்
15-02-2016
மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் திருச்செந்தூர் முருகனுக்கு 27-ம் வருடமாக வேல்தரித்தல், காவடி பூஜை போன்றவை நடந்தது. இதற்காக கணபதி ஹோமம், அபிஷேகம், நையாண்டி மேளம், பறக்கும் வேல் காவடி வேல் தரித்தல், காவடி அலங்காரம் நடந்தது. மதியம் அன்னதானம், மாலையில் பறக்கும் வேல்காவடி, கும்பவேல் காவடி, புஷ்ப காவடிகளின் ஊர்வலம் யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டன.
வடக்கன்பாகம் தர்மசாஸ்தா கோவிலில் இருந்து பறக்கும் வேல் காவடிகள் மற்றும் சிறப்பு பூஜை, காவடி அலங்காரம் நடந்தது. பின்னர் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று அங்கு தீபாராதனை நடந்தது.
மதியம் சாஸ்தா கோவிலில் அன்னதானமும், மாலையில் பறக்கும் வேல்காவடி மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றன.மேலும் சேரமங்கலம் தென்திருவரங்கத்து ஆழ்வார்சாமி, சிவன்சாமி கோவிலில் இருந்தும் பறக்கும் வேல்காவடி, பிள்ளையார் கோவில், மணவாளக்குறிச்சி, கல்லுக்கட்டி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டன.
Tags:
Manavai News