மண்டைக்காட்டில் இந்து முன்னணி நிர்வாகி ஆட்டோ எரிப்பு

மண்டைக்காட்டில் இந்து முன்னணி நிர்வாகி ஆட்டோ எரிப்பு
11-01-2016
மண்டைக்காடு மருத்துவக் காலனியைச் சேர்ந்தவர் பிரதீப்குமார், (வயது 35). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி செயலாளராகவும் உள்ளார். தினமும் பிரதீப்குமார் ஆட்டோவை தனது வீட்டின் முன்பு நிறுத்துவது வழக்கம். பிரதீப்குமார் சவாரிக்கு சென்று விட்டு ஆட்டோவை தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.
நள்ளிரவு 11.30 மணியளவில் வீட்டின் வெளியே சத்தம் கேட்டது. பிரதீப் குமார் கதவை திறந்து வெளியே வந்தபோது ஆட்டோ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக வீட்டில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். ஆனால் அதற்குள் ஆட்டோவின் இருக்கைகள் முற்றிலுமாக சேதம் அடைந்தது. இதுபற்றி மண்டைக்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பிரதீப்குமார் ஆட்டோவிற்கு தீ வைத்துச் சென்ற மர்மநபர்கள் யார்? என்பது குறித்து விசாரித்தனர். பிரதீப் குமாரிடமும் போலீசார் விசாரித்தனர். அவருக்கு வேறு யாருடனாவது முன் விரோதம் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிரதீப்குமார் ஆட்டோ தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தை அறிந்ததும் இந்து முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Post a Comment

Previous News Next News