மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
27-12-2015
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் மாவட்ட பா.ஜனதா பொதுசெயலாளர் குமரி ரமேஷ், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரி முருகேசன், மண்டைக்காடு பேரூராட்சி துணை தலைவர் ஜெகன் சந்திரகுமார், ஒன்றிய தலைவர் முத்து கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு பூஜைக்கு பிறகு பா.ஜனதாவினர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவில் வளாகத்தை சுத்தப்படுத்தினர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்