கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
21-12-2015
கன்னியாகுமரியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் முக்கிய சுற்றுலா சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த மாதங்களில் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.
இந்த ஆண்டும் கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக எண்ணிக்கையில் இருந்தது. இந்தநிலையில் மழை காரணமாக கூட்டம் குறைய தொடங்கியது. தற்போது மீண்டும் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று அதிகாலையில் சூரிய உதயத்தை காண முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சென்று சாமி தரிசனம் செய்தனர். காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் மற்றும் பூங்காக்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

Post a Comment

Previous News Next News