மணவாளக்குறிச்சி அருகே வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
25-12-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டம் கோவில் தெருவை சேர்ந்தவர் சகாய சாலின் (வயது 26). இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த போது, முட்டம் ஓடைத்தெருவை சேர்ந்த ஆன்றோ தாத்தூஸ் (30), தோணிமுக்கு பகுதியை சேர்ந்த வினோ (30), சாஜின் (29), ஆன்றனி (30) ஆகிய 4 பேரும் சேர்ந்து சகாய சாலினை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும், கத்தியை காட்டி மிரட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சகாய சாலின் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும், இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஆன்றோ தாத்தூஸ் உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்