மண்டைக்காடு பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்
15-08-2015
மண்டைக்காடு பேரூராட்சியில் 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு, நேற்று முதல் பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமையில், செயல் அலுவலர் விஜயன் முன்னிலையில், வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பள்ளி மாணவ-மாணவிகளின் பேரணி மற்றும் மனித சங்கிலி ஆகியவையும் நடந்தன.
இதைத்தொடர்ந்து மண்டைக்காடு பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:
சுற்றுவட்டார செய்திகள்