மணவாளக்குறிச்சியில் இருந்து மண்டைக்காட்டிற்கு யானை மீது களப ஊர்வலம்
14-08-2015
மணவாளக்குறிச்சி யானையை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு யானை மீது களப ஊர்வலம் இன்று சென்றது. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று மதியம் தருவை நடேசர் ஆலயத்தில் இருந்து களபம் எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து யானையை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து யானை, மேளங்கள் முழங்க மாலை 4.30 மணி அளவில் புறப்பட்டது. பின்னர் மணவாளக்குறிச்சி சந்திப்பு, பிள்ளையார்கோவில், பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு மாலை 6.30 மணி அளவில் சென்றது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டு சென்றனர்.
செய்தி மற்றும் போட்டோஸ்
"புதியபுயல்" முருகன்
மணவாளக்குறிச்சி
Tags:
Manavai News