மணவாளக்குறிச்சியில் த.மு.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
12-04-2015
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மணவாளக்குறிச்சி கிளை சார்பில் மணவாளக்குறிச்சி சந்திப்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதற்கு மாவட்ட செயலாளர் அன்வர் ஹுசைன் தலைமை தாங்கினார். கிளைசெயலாளர் முகம்மது ஹாலிக் முன்னிலை வகித்தார்.
தண்ணீர் பந்தலை பொருளாளர் அன்வர் சதாத் திறந்து வைத்தார். இதில் அலி அக்பர், முகம்மது ரபீக், ஹைதர், பாரூக், சாதிக் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:
Manavai News