வெள்ளிச்சந்தை அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை:
போலீஸ் விசாரணை
11-04-2015
வெள்ளிச்சந்தை போலீஸ் சரகம் காட்டுவிளையை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 52). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் அருணாதேவி (வயது 17). பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். நேற்று முன்தினம் மாலை அருணா தேவி வீட்டு வேலை செய்யாமல், செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை ரத்தினம் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் அருணா தேவியின் அறை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அருணாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரத்தினம் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்