மணவாளக்குறிச்சி, ஆற்றின்கரை தர்மசாஸ்தா கோவில் மண்டலபூஜை திருவிழா நடைபெற்றது
03-01-2015
மணவாளக்குறிச்சி ஆற்றின்கரையில் பத்மனய்யன் என்கிற தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3-வது ஆண்டு மண்டல பூஜை திருவிழா, நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாள் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 9 மணிக்கு விளையாட்டு போட்டிகளும், மாலை 6 மணிக்கு செண்டை மேளமும், இரவு 7 மணிக்கு தீபாராதனையும், அதைத்தொடர்ந்து மெல்லிசைக் கச்சேரியும் நடைபெற்றது.
இன்று காலை 7 மணிக்கு அஷ்டாபிஷேகமும், பகல் 12.30 மணிக்கு உச்சபூஜையும், 1 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு பஜனையும், 9 மணிக்கு ஆழி பூஜையும் நடந்தது. தொடர்ந்து அலங்கார தீபாராதனையுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Tags:
Manavai News