மணவாளக்குறிச்சி பகுதியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

மணவாளக்குறிச்சி பகுதியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
15-01-2015
தமிழர்களின் விழாவான பொங்கல் விழா தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆசாரிதெரு, வடக்கன்பாகம், சக்கப்பத்து, தருவை, பிள்ளையார்கோவில், பம்மத்துமூலை, ஆற்றின்கரை உள்பட பல இடங்களில் இன்று காலையில் பொங்கல் இட்டு வழிபட்டனர்.
அனைத்து வீடுகளிலும் இன்று காலையில் கோலம் இட்டு அலங்கரித்து, புத்தாடை உடுத்தி, பொங்கல் இட்டு வழிபட்டனர். பொங்கல் பொங்கி வரும்போது, பொங்கலோ பொங்கல் என சத்தம் போட்டு, குலவை இட்டனர். பின்னர் ஒருவரையொருவர் பொங்கல் வாழ்த்து கூறிக்கொண்டனர்.
பொங்கல் வைத்தவர்கள் மற்ற சமுதாய மக்களுக்கும் பொங்கல் கொடுத்து, அன்பை பரிமாறிக் கொண்டனர்.

Post a Comment

Previous News Next News