மணவாளக்குறிச்சியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் பஜனை ஊர்வலம்

மணவாளக்குறிச்சியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் பஜனை ஊர்வலம்
20-12-2014
உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்களால் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பாட்டுப்பாடி மகிழ்விப்பார்.
மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம்பத்தி நாதர் ஆலயத்தில் இருந்து டிசம்பர் மாதத்தில் தினமும் இரவில் கிறிஸ்தவ பாடல்களை பாடி, மணவாளக்குறிச்சி பகுதிகளில் பஜனை குழுவினர் வந்தனர். நேற்று பஜனை குழுவினருடன் கிறிஸ்துமஸ் தாத்தா வந்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பஜனை குழுவினர் அனைத்து சமுதாய வீடுகளுக்கும் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர். சிலர் பஜனை குழுவினருக்கு உணவு ஏற்பட்டுகள் செய்திருந்தனர். மேலும் மணவாளக்குறிச்சி பகுதிகளில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து ஸ்டார்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வீடுகளும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.


செய்தி மற்றும் போட்டோஸ்
டைசன் M.A.,B.Ed., ஆசாரிதெரு, மணவாளக்குறிச்சி

Post a Comment

Previous News Next News