மணவாளக்குறிச்சியில் நெல் நாற்று நடும் எந்திரம் குறித்த செயல்விளக்க முகாம்

மணவாளக்குறிச்சியில் நெல் நாற்று நடும் எந்திரம் குறித்த செயல்விளக்க முகாம்
01-11-2014
மணவாளக்குறிச்சி, சேரமங்கலத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், நெல் நாற்று நடும் எந்திரம் மூலம் நடவு செய்வது குறித்த செயல் விளக்க முகாம் நடந்தது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் நாற்றுகள் நடவு செய்யலாம். வேலையாட்களும் கூலியும் குறையும் என விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த முகாமில் மணவாளக்குறிச்சி பெரியகுளம் புரவு பாசன விவசாயிகள் மற்றும் சங்க செயலாளர் ராஜாமணி, தக்கலை வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் நடராஜன், இளநிலைப் பொறியாளர்கள் அமல்ராஜ், ஜான் கென்னடி சிங், உறுப்பினர்கள் ஜோதிகுமார், பிரான்சிஸ் சேவியர் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி பொறியாளர் மகேஷ் செய்திருந்தார்.

Post a Comment

Previous News Next News