மணவாளக்குறிச்சி அருகே அதிமுகவினர் ஜெயலலிதா விடுதலைக்காக வேண்டி பால்குடம் ஊர்வலம்
06-10-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள திருநனார்குறிச்சியில் வெள்ளிமலை பேரூர் கழக எம்ஜிஆர் மன்றம் சார்பில் பால்குடம் ஊர்வலம் நடந்தது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கவும், அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை பெறவும் வேண்டி பால்குட ஊர்வலம் நடந்தது.
பால்குட ஊர்வலம் திருநயினார்குறிச்சி வருக்கத்தட்டு பகுதியில் உள்ள சாஸ்தா கோவிலில் இருந்து மாலை 4 மணி அளவில் புறப்பட்டு திருநயினார்குறிச்சி கறைகண்டேஸ்வரம் மகாதேவர் கோவிலுக்கு சென்றது. பால்குட ஊர்வலம் கறைகண்டேஸ்வரம் மகாதேவர் கோவிலுக்கு சென்ற பின்னர், கறைகண்டேஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அப்போது ஜெயலலிதா விடுதலைக்காக அதிமுகவினர் வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அசோக்குமார், துணைசெயலாளர் முருகன், வழக்கறிஞர் சந்திரசேகர், மோகன், கழக உறுப்பினர்கள் கிருஷ்ணதாஸ், பரமார்தலிங்கம், மனோகரன், கனகராஜ், ராஜ்குமார், ஹனிபா, ராஜசேகர், பிரபாகரன், குயின்மேரி, சந்திரகலா, சிவதாணு, சுயம்புலிங்கம், செல்லத்துரை உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் போட்டோஸ்
புதியபுயல் முருகன்
Tags:
சுற்றுவட்டார செய்திகள்