மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம்
26-10-2014
தமிழக அரசின் சிறப்பு மருத்துவமுகாம் மாவட்ட துணை இயக்குநர் மதுசூதனன் உத்தரவின் பேரில், குருந்தன்கோடு வட்டார சுகாதார நிலையம் சார்பில் மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமை மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ஜாண் கிறிஸ்டோபர், நிர்வாக அலுவலர் ஜான்சன், ஆசிரியர் மன்ற செயலர் ராஜேந்திரன், சுகாதார துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் அருள்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீப் குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் கலந்து கொண்டன. இதற்கான ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் அருள்தாஸ் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தினர்.
Tags:
Manavai News