மணவாளக்குறிச்சியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கொண்டுவரப்பட்ட ஒட்டகம்

மணவாளக்குறிச்சியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கொண்டுவரப்பட்ட ஒட்டகம்
01-10-2014
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகிற 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. (தமிழக அரசு தலைமை ஹாஜி பக்ரீத் பண்டிகை 6-ம் தேதி என அறிவித்து உள்ளார்).
இந்த பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடு மற்றும் ஒட்டகம் போன்றவை குர்பானி கொடுக்கப்படுவது வழக்கம். குமரி மாவட்டத்தில் குர்பானிக்காக பெருமளவில் ஆடு, மாடுகள் கொடுக்கப்படுகிறது. ஒட்டகம், இந்தியாவில் ராஜஸ்தான் போன்ற பகுதியில் இருந்து கொண்டுவரப்படுவதால் அதிக செலவும், நன்கு பராமரிக்க வேண்டியும் உள்ளது. இதனால் ஒட்டகம் குமரி மாவட்டம் உள்பட தமிழகத்தில் அதிகளவில் கொடுக்கப்படுவது இல்லை.
ஆனால் முஸ்லிம்கள் ஒட்டகம் குர்பானிக்காக ஒருமுறையேனும் கொடுக்கப்படுவதை விரும்புவார்கள். அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் பல இடங்களில் இதற்கு முன் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பக்ரீத் பண்டிகையை ஒட்டி மணவாளக்குறிச்சி தமுமுக சார்பில் ஒட்டகம் முதல்முறையாக கொண்டுவரப்பட்டது. ஒட்டகம் ஆந்திராவில் இருந்து வள்ளியூர் கொண்டுவரப்பட்டு, நேற்று மாலை மணவாளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்டது.
இந்த ஒட்டகம், மணவாளக்குறிச்சியை சேர்ந்த செய்யதலி, ரஃபீக், சாகுல் ஹமீது, அஜ்மல், காலித், சம்சுதீன் மற்றும் நம்பாளி பீர்முஹம்மது ஆகிய 7 பேர் கொண்டக்குழு செலவில் கொண்டு வரப்பட்டது. ஒட்டகம் மணவாளக்குறிச்சி சாலத்திவிளையில் கட்டிபோப்பட்டுள்ளது. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

Post a Comment

Previous News Next News