வளர்ச்சி திட்ட பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவு

வளர்ச்சி திட்ட பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவு
26-09-2014 
கன்னியாகுமரி மாவட்ட புதிய கலெக்டராக பெறுப்பெற்றுள்ள சஜ்ஜன் சிங் சவான் நேற்று குமரி மேற்கு மாவட்ட வருவாய் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இன்று அவர் கிழக்கு மாவட்ட அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். காலையில் கன்னியா குமரியை அடுத்த பெருமாள்புரத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் யூனியன் அலுவலகத்திற்கு திடீரென சென்று அங்கு நடை பெறும் பணிகளை பார்வையிட்டார்.
அரசு அறிவித்துள்ள வளர்ச்சி திட்ட பணிகள் எப்படி நடைபெறுகிறது, குறிப்பிட்ட தேதிகளில் நல உதவிகள் வழங்கப்பட்டு உள்ளனவா? எவை எவை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது என்பது பற்றியும், பின்னர் யூனியன் பகுதிக்குள் நடைபெறும் திட்ட பணிகள் பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது, ‘அரசின் அனைத்து திட்டங்களும் அடித்தட்டு மக்களை சென்றடைய வேண்டும், தாமதமின்றி பணிகள் முடிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ எனவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அங்கும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சான்றிதழ்கள் அந்தந்த தேதிகளில் வழங்கப்படுகிறதா? அதில் ஏதும் தாமதம் இருக்கிறதா? என்றும் கேட்டறிந்தார்.பின்னர் அவர் அலுவலக பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

Post a Comment

Previous News Next News