மண்டைக்காடு புதூர் பகுதியில் கடல் சீற்றம் மின்கம்பம் கடலுக்குள் சரிந்து விழுந்தது
16-09-2014
மண்டைக்காடு புதூர் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மின்கம்பம் கடலுக்குள் சரிந்து விழுந்தது. மண்டைக்காடு புதூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் நின்ற மின்கம்பம் கடலுக்குள் சரிந்து விழுந்தது. மேலும் 3 மின் கம்பங்கள் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. அங்குள்ள கான்கிரீட் ரோடும் அரிக்கப்பட்டுள்ளன.
அழிக்கால் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் கற்களை அலை கடலுக்குள் இழுத்து சென்றுள்ளது. கான்கிரீட் ரோடு இடிந்து கடல் தண்ணீர் வீட்டுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. சாலைகளும் சேதம் அடைந்துள்ளன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- முட்டம் பகுதியில் அமைய உள்ள மீன் பிடித்துறைமுகத்துக்கு கடலுக்குள் கற்கள் போடப்பட்டு தடுக்கப்படுவதால்தான் அழிகால் ஊருக்குள் கடல் நீர்புகுந்து வருகிறது. இதற்கு முன் இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை. எனவே அழிகால் பகுதியிலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்