மணவாளக்குறிச்சியில் சரியான நேரத்தில் இயங்காத அரசு பேருந்துகள்: பொதுமக்கள் அவதி

மணவாளக்குறிச்சியில் சரியான நேரத்தில் இயங்காத அரசு பேருந்துகள்: பொதுமக்கள் அவதி
29-09-2014
மணவாளக்குறிச்சி பகுதி வழியாக பல ஊர்களுக்கு அரசு பேருந்துகள், மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மணவாளக்குறிச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆசாரிப்பள்ளம் மற்றும் இராஜக்கமங்கலம் என இரு மார்க்கம் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தினமும் காலை வேளைகளில் நாகர்கோவிலுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், தனியார் பணியாளர்கள், தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்கு செல்ல வசதியாக பல பேருந்துகள் ஓரளவு சரியான நேரத்தில் இயங்கி வந்தது. இதற்கு வசதியாக காலை 6 மணி மற்றும் 6.20 மணிக்கு ஆசாரிப்பள்ளம் வழியாக பேருந்தும், காலை 6.35 மணிக்கு இராஜாக்கமங்கலம் வழியாக திருநெல்வேலி பேருந்தும், 7 மணிக்கு ஆசாரிப்பள்ளம் வழியாக ஒழுங்காக அதற்குரிய நேரத்தில் இயங்கி வந்தன. இதன் மூலம் மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பள்ளம், செம்பொன்விளை, குறும்பனை, ஆலஞ்சி, சைமன்காலனி, மண்டைக்காடு, அம்மாண்டிவிளை, வெள்ளமோடி போன்ற இடங்களில் இருந்து நாகர்கோவில் சென்றனர்.
ஆனால் தற்போது இந்த பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை. காலை 6.20 மணிக்கு மணவாளக்குறிச்சி வரும் பேருந்து ஒழுங்காக இயக்கப்படாமல் கடமைக்காக ஒருசில தினங்கள் 6.40 மணிக்கோ அல்லது 6.50 மணிக்கோ இயக்கப்படுகிறது. மற்ற பேருந்துகள் சில நாள்களில் வராமலே உள்ளது. வந்தாலும் அதற்குரிய நேரத்தில் வருவதில்லை. எனவே காலை வேளையில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்காக செல்பவர்களுக்கு வசதியாக மேற்படி நேரத்தில் ஒழுங்காக பேருந்துகளை இயக்கும்படி மணவாளக்குறிச்சி பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

Previous News Next News