நாகர்கோவில் புத்தக திருவிழாவில் நடைபெற்ற ஜாஹிர் உசேனின் மாபெரும் தசாவதார நாட்டிய நாடகம்: பார்வையாளர்கள் வியப்பு
20-08-2014
நாகர்கோவில் குமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் இணைந்து குமரி மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு 2-ம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 4-ம் நாள் திருவிழா கலைநிகழ்ச்சியில் கலைமாமணி ஜாஹிர் உசேனின் தசாவதார நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஜாஹிர் உசேன் குழுவினர் தசாவதார நாட்டிய நிகழ்ச்சிகளை மிகவும் தத்ரூபமாக மேடையில் காண்பித்தனர். சுமார் 2 மணி நேரம் இடைவெளி இல்லாமல் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கண்ட பார்வையாளர்கள் மிகவும் வியந்தனர். நரசிம்ம, வாமன, இராம, பலராம, கிருஷ்ண, கல்கி உள்பட 10 அவதாரங்களை ஜாஹிர் உசேன் குழுவினர் நிகழ்த்தினர். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
தமிழகம் மட்டுமில்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இந்நிகழ்ச்சியை நடத்தி பாராட்டுகளை பெற்ற ஜாஹிர் உசேனின் நாகர்கோவில் நிகழ்ச்சி, அவரின் 111-வது மேடை நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியை நாகர்கோவில் செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. குமரி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) உதயகுமார், சார் கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆகியோர் ஜாஹிர் உசேன் மற்றும் அவரது குழுவினரை பாராட்டினர்.
போட்டோஸ்
புதியபுயல் முருகன்
Tags:
குமரிமாவட்ட செய்திகள்