அகில இந்திய மக்கள் நலக்ககழக குமரி மேற்கு மாவட்ட தலைவர் நியமனம்

அகில இந்திய மக்கள் நலக்ககழக குமரி மேற்கு மாவட்ட தலைவர் நியமனம்
29-06-2014
அகில இந்திய மக்கள் நலக்கழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட தலைவராக இருப்பவர் சிவகுமார். இந்த கழகத்தின் மாவட்ட தலைமை அலுவலகம் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ளது. தலைமை அலுவலகம் சென்னை வண்ணாரபேட்டையில் உள்ளது.
கழகத்தின் குமரி மேற்கு மாவட்ட தலைவராக இன்று மார்த்தாண்டம் உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவர் பொறுப்பேற்று கொண்டார். இவருடைய பொறுப்பை குமரி மாவட்ட தலைவர் சிவகுமார் வழங்கினார். மேற்கு மாவட்ட தலைவராக பொறுப்பேற்று கொண்ட நீலகண்டன் மார்த்தாண்டம் பகுதியில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பொதுமக்களுக்கு பல சமூக நல உதவிகளை வழங்கி வருகிறார்.

Post a Comment

Previous News Next News