கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மந்திரி பதவி

கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மந்திரி பதவி
27-05-2014
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் 7 முறை போட்டியிட்டு 2–வது முறையாக வெற்றி பெற்று உள்ளார்.

அவருக்கு மோடி மந்திரி சபையில் மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொன்.ராதாகிருஷ்ணன் 1999–ம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று வாஜ்பாய் மந்திரி சபையில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை மேம்பாட்டு இணை மந்திரியாகவும், நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத்துறை இணை மந்திரியாகவும், தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரியாகவும் பணியாற்றினார்.

தற்பொழுது 2–வது முறையாக பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளதால் குமரி மாவட்டத்தில் பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரியாக பதவியேற்று கொண்டதை அடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பா.ஜனதாவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். நாகர்கோவில் நகர பா.ஜனதா சார்பில் அண்ணா பஸ் நிலையம் முன்பு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். நகரசபை தலைவர் மீனாதேவ் இனிப்பு வழங்கினார். மாவட்ட துணை தலைவர் தேவ், வர்த்தக அணி தலைவர் முத்துராமன், பொருளாளர் கணேசன், வரவேற்புக்குழு தலைவர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous News Next News