மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
14-05-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள பரப்பற்று என்ற இடத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் யமுனா (வயது 20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து, தற்போது தேர்வு எழுதி உள்ளார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் மணிகண்டன் (வயது 21). இவரும், யமுனாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் நேற்று யமுனா கல்லூரிக்கு செல்வதாக கூறிக்கொண்டு சென்றவர், காதலர் மனிகண்டனுடன் சென்று நாகர்கோவில் சார்பதிவாளர் அலுவலகம் சென்று அங்கு நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவரும் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸார் காதல் ஜோடியின் பெற்றோர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Tags:
Manavai News