மணவாளக்குறிச்சி, மருதிவிளை நேதாஜி இளைஞர் மன்ற 24-வது ஆண்டு விழா மற்றும் மேதின விழா நடைபெற்றது
03-05-2014
மணவாளக்குறிச்சி சேரமங்கலம் அருகே உள்ள மருதிவிளை நேதாஜி இளைஞர் மன்றம் சார்பில் மன்றத்தின் 24-வது ஆண்டு விழா மற்றும் மே தின விழா 1-ம் தேதி மருதிவிளையில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காலை 9 மணிக்கு தேசிய கொடியேற்றப்பட்டது. குருந்தன்கோடு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீப் குமார் தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டு போட்டிகளை மன்ற துணைத்தலைவர் நீலராஜன், மன்ற செயலாளர் ஒயஸிலின் சஜூ ஆகியோர் நடத்தினர்.
மாலை 3 மணிக்கு பேச்சுப்போட்டி மற்றும் பாட்டுபோட்டிகள் நடத்தப்பட்டன. மாலை 5 மணிக்கு வினாடிவினா போட்டியும், தொடர்ந்து வடம் இழுத்தல் போட்டியும் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு மன்ற தலைவர் ஜெகதீஸ் தலைமை தாங்கினார். மன்ற உறுப்பினர் சுபாஷ் வரவேற்புரை வழங்கினார். மன்ற செயல் தலைவர் நாராயண தாஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மண்டைக்காடு பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன், குட்டிநாடார், சாமுவேல் கிறிஸ்துதாஸ், ரோஸ்டார்லிங், ரமேஷ், நேரு யுவகேந்திர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரவு 9 மணிக்கு குளச்சல் சிவசூரியனின் மிமிக்கிரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 9.30 மணிக்கு மன்ற கௌரவ தலைவர் குட்டி நாடார் நடுவராக பங்குபெற்ற “பிள்ளைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது பாசமா? பணமா?” என்ற தலைப்பில் மாபெரும் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தி மற்றும் போட்டோஸ்
பிரபு
மருதிவிளை, சேரமங்கலம்