மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு கல்வியியல் கல்லூரியில் வாக்குசாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி

மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு கல்வியியல் கல்லூரியில் வாக்குசாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி
16-04-2014
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குசாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகர்கோவில் இந்து கல்லூரியில் நாகர்கோவில், கன்னியாகுமரி தொகுதிகளுக்கான வாக்குசாவடி அதிகாரிளுக்கு பயிற்சி நடந்தது.
இதுபோல மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு கல்வியியல் கல்லூரியில் வைத்து குளச்சல் தொகுதி வாக்குசாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி நடத்தப்பட்டது. பயிற்சியில் உதவி தேர்தல் அதிகாரி பேசும்போது “வாக்குபதிவுக்கு வரும் வாக்காளர்களிடம் வாக்காளர் அட்டை இருக்கிறதா” என்று கேட்கவேண்டும். அப்படி அடையாள அட்டை இல்லாதபட்சத்தில் அவரின் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வங்கி அல்லது தபால் அலுவலக பாஸ்புக், பான் அட்டை உள்பட 11 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு வந்தால் வாக்களிக்கலாம். என்று குறிப்பிட்டார்.

மேலும் மின்னணு வாக்குபதிவு எந்திரம் எவ்வாறு கையாளுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Post a Comment

Previous News Next News