மணவாளக்குறிச்சி பகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

மணவாளக்குறிச்சி பகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
07-04-2014
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 24-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு 6 முனை போட்டி நிலவுகிறது.
திமுக சார்பில் எப்.எம்.ராஜரெத்தினம், பா.ஜனதா சார்பில் பொன்.இராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமார், அதிமுக சார்பில் ஜாண்தங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஏ.வி.பெல்லார்மின் மற்றும் ஆம் ஆத்மி சார்பில் சுப.உதயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்குள் யார் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆவது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மின், திமுக வேட்பாளர் எப்.எம்.ராஜரெத்தினம் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். இரு நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் உதயகுமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஜாண்தங்கம் வாக்கு சேகரித்தார். நேற்று பா.ஜனதா கட்சி வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன் வாக்குகளை சேகரித்தார்.

மேலும் ஒவ்வொரு கட்சி சார்பில் வாகனங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதனால் மணவாளக்குறிச்சி பகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்து உள்ளது.

Post a Comment

Previous News Next News