மணவாளக்குறிச்சி அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 8 லாரிகள் பறிமுதல்

மணவாளக்குறிச்சி அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 8 லாரிகள் பறிமுதல்
18-04-2014
குளச்சல் மீன்பிடி துறைமுக பணி கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது. தற்போது சில வாரங்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கருங்கற்கள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு துறைமுக பணிகள் நடந்து வருகிறது. அஞ்சுகிராமம் பகுதியில் இருந்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்துக்கு கருங்கற்கள் எடுத்து வரப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலையில் நாகர்கோவில் கனிமவள துணை இயக்குநர் ராஜாராம் மற்றும் தனிவருவாய் ஆய்வாளர் முருகன் ஆகியோர் மணவாளக்குறிச்சி சந்திப்பு அருகே தருவை பகுதியில் கருங்கற்கள் ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது 8 லாரிகளில் அதிகபாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து அந்த 8 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த லாரிகளை மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் பத்மநாபபுரம் கோட்டாட்சியர் விசாரணைக்காக பத்மநாபபுரம் கொண்டு செல்லப்பட்டது.

Post a Comment

Previous News Next News