வெள்ளிமலை முருகன் திருக்கோவிலில் கிரிவலம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது
27-04-2014
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய திருத்தலங்களில் ஒன்று வெள்ளிமலை மீது உள்ள முருகன் கோவில். இங்கு அனைத்து பௌர்ணமி நாள்களிலும் மாலை வேளையில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பஜனைப்பாடி கிரிவலம் வருவார்கள்.
அதன்படி, இம்மாதம் பௌர்ணமி தினத்தன்று மாலை 5 மணிக்கு வெள்ளிமலை முருகன் கோவிலை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வந்து முருக தரிசனம் செய்தார்கள். தமிழ்மாதம் முதல் ஞாயிற்று கிழமைகளில் கோவிலில் விளக்கு பூஜை நடைபெறுகிறது. அதேபோல் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையை கோவில் பூசாரி பத்பநாப ஐயர் நடத்தி வைத்தார். இவர் கோவில் மேல்சாந்தியாக உள்ளார். விளக்குபூஜை நிகழ்ச்சியில் வெள்ளிமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் போட்டோஸ்
“புதியபுயல்”” முருகன்
Tags:
சுற்றுவட்டார செய்திகள்