மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை நடைபெற்றது
12-03-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா மார்ச் 2-ம் தேதி துவங்கி 11-ம் தேதி வரை நடந்தது. பத்தாம் நாள் திருவிழாவான நேற்று இரவு 12 மணி அளவில் ஒடுக்கு பூஜை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஒடுக்கு பூஜைக்கு முன்னதாக பூஜையின் சிறப்பு அம்சமாக பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் அடங்கிய 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சுத்தமான முறையில் விரதம் இருந்தவர்களால் தயாரிக்கப்பட்டது. பின்னர் சன்னதி அருகில் உள்ள சாஸ்தான் கோவில் பக்கம் இருந்து ஒடுக்கு பவனி வந்தது.
பூஜைக்கான உணவு வகைகள் வெள்ளைத்துணியால் மூடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. உணவு வகைகளை வாய்ப்பூட்டு கட்டி பூசாரிகள் தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து சென்றனர். பின்னர் உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்பட்டது ஒடுக்கு பூஜையின் போது பூரண அமைதியான சூழல் ஏற்பட்டது.
போட்டோஸ
புதியபுயல் முருகன்
Tags:
சுற்றுவட்டார செய்திகள்