மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா நிகழ்ச்சிகள்
26-02-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா வருகிற மார்ச் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை (1189 மாசி 18 – 27) 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவில் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் வருமாறு,
1-ம் நாள் நிகழ்ச்சியில் காலை 6.30 மணிக்கு தீபாராதனையும், கல்லடிவிளை விஜயன் வழங்கும் ஸ்ரீபகவதி செண்டைமேளம் குழுவினரின் சிறப்பு செண்டைமேளமும், காலை 7 மணிக்கு திருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கிறது. 2-ம் நாள் நிகழ்ச்சியில் மாலை 6.30 மணிக்கு வானொலி புகழ் திருப்பதிசாரம் சிவசங்கரன் குழுவினரின் சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு வக்கம் ஸ்ரீதுர்க்கா தேவி கதகளியோகம் “கதகளி” நிகழ்ச்சியும் நடக்கிறது.
3-ம் நாள் நிகழ்ச்சியில் காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், மாலை 3 மணிக்கு கீழக்கரை பிடாகையில் இருந்து யானை மீது களபம் பவனி வருதல், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ம் நாள் நிகழ்ச்சியில் மாலை 4 மணிக்கு கொத்தனார்விளையில் இருந்து யானை மீது களபம் பவனி வருதல் நிகழ்வும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 5-ம் நாள் நிகழ்ச்சியில் மாலை 6 மணிக்கு மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் இருந்து யானை மீது களபம் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 6-ம் நாள் நிகழ்ச்சியில் மாலை 4 மணிக்கு குளச்சல் களிமார் கணேசபுரம் பிள்ளையார்கோவிலில் இருந்து யானை மீது களபம் பவனி வருதலும், இரவு 1 மணிக்கு வலியபடுக்கை (மஹாபூஜை) நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
7-ம் நாள் நிகழ்ச்சியில் மாலை 6 மணிக்கு பாலப்பள்ளத்தில் இருந்து யானை மீது களபம் பவனி வருதலும், மாலை 7 மணிக்கு சிறப்பு வில்லிசையும் நடக்கிறது. 8-ம் நாள் நிகழ்ச்சியில் மாலை 6 மணிக்கு செம்பொன்விளையில் இருந்து யானை மீது களபம் பவனி வருதலும், இரவு 9.30 அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடைபெறுகிறது. 9-ம் நாள் நிகழ்ச்சியில் காலை 7.30 மணிக்கு பைங்குளம் அனந்தமங்கலம் ஸ்ரீகண்டன் சாஸ்தா ஆலயத்திலிருந்து சந்தனகுடம் மற்றும் காவடி ஊர்வலம் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
10-ம் நாள் விழாவில் அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான்கோவிலிருந்து யானை மீது களபம் பவனி வருதலும், காலை 5 மணிக்கு அடியாந்திர பூஜை-குத்தியோட்டம் நிகழ்வும், இரவு 10 மணிக்கு அய்யம்பாறவிளை குழுவினரின் ஹரிகதை மற்றும் இன்னிசை விருந்து நிகழ்வும், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜையும், அதை தொடர்ந்து தீபாராதனையும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்