மணவாளக்குறிச்சி, தருவை ஆதிபராசக்தி கோவிலில் இருந்து மேல்மருவத்தூருக்கு செவ்வாடை பக்தர்கள் ஊர்வலம்
27-12-2013
மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோவிலில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு 26-ம் தேதி செவ்வாடை பக்தர்களின் மாபெரும் இருமுடி கட்டு ஊர்வலம் சென்றது.
இந்த ஊர்வலத்தில் ஆதிபராசக்தி பெண் பக்தர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து இருமுடி கட்டை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.அவர்கள் “ஓம் சக்தியே! ஆதி சக்தியே! பராசக்தியே! சரணம்! என்ற மாத்திரத்தி உரக்க சொல்லிக்கொண்டே சென்றனர்.
சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
செய்தி: புதியபுயல் முருகன்
Tags:
மணவை செய்திகள்