மணவாளக்குறிச்சி, ஆசாரிதெருவில்
பாம்புகளின் படையெடுப்பு
10-12-2013

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னால் இந்த இடத்தில் 2 பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து நடனமாடி கொண்டிருந்தது. இந்த காட்சியை இப்பகுதியினர் பார்த்தனர். மேலும் சிலர் இதை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.
தொடர்ந்து இப்பகுதியில் ஏராளமான பாம்புகள் இருப்பதாக கருதி, சிலர் பாம்பு வேட்டையில் ஈடுபட்டனர். அதில் 2 பாம்புகள் பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சலாவுதீனுக்கு சொந்தமான இடத்திற்கு அருகில் உள்ள பகுதியில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கின்றன. இந்த இடத்தில்தான் பாம்புகள் குட்டிகள் வளர்ந்து வருவதாக தெரிகிறது. இங்கிருந்து தான் பாம்புகள் அருகில் இருக்கும் மதில் மீது ஏறி சலாவுதீனுக்கு சொந்தமான இடத்திற்கு வருவதாக தெரிகிறது. மேலும் இப்பகுதியில் ஏராளமான பாம்புகள் உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அருகில் உள்ளவர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
Tags:
மணவை செய்திகள்