மணவாளக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்வதை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் தர்ணா போராட்டம்
23-11-2013
மணவாளக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்வதை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மணவாளக்குறிச்சியில் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதை கண்டித்து மணவாளக்குறிச்சி சந்திப்பில் அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குருந்தன்கோடு ஒன்றிய பிரதிநிதி புவனேந்திரன் தலைமை தாங்கினார்.
குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தர்ணா போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம்பிள்ளை, வெள்ளிச்சந்தை ஊராட்சி உறுப்பினர் திருமலை, மணவாளக்குறிச்சி பேரூர் தி.மு.க. செயலாளர் குட்டி ராஜன், பேரூர் காங்கிரஸ் தலைவர் குமார், மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் சாமுவேல் சேகர், ம.தி.மு.க பேரூர் தலைவர் மைதீன்கான், பா.ஜனதா கட்சி மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மணிகண்டன், பேரூர் தலைவர் கார்த்திகேயன், மணவாளக்குறிச்சி வியாபாரிகள் சங்க தலைவர் தங்கராஜ், அ.தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி அப்துல்சமது பஷீர் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
Manavai News