ஸ்ரீ துர்க்கை, லெட்சுமி, சரஸ்வதி திருக்கோவில் திருவிழா
14-08-2013
குமரி மாவட்டம் சாமிதோப்பிற்கு தெற்கே சோட்டபணிக்கன் தேரிவிளை எனும் ஊரில் ஊர் உள்ளது. இங்கு துர்க்கை, லெட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களும் ஒன்றாக அவதாரம் செய்த திருக்கோவில் ஓன்று உள்ளது.
இங்கு 09-08-2013 ஆடி 24 வெள்ளிக்கிழமை கொடைவிழா நடைபெற்றது. அன்று காலை 9 மணி அளவில் சக்தி கொடி ஏந்தி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் பெண்கள் அம்மன் வாகனம் தூக்கி பவனி வந்தனர். 10.30 மணிக்கு அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் அக்னி குண்டத்தை சுற்றிவந்து காணிக்கையாக வத்தல் மிளகாயை தீயில் போட்டனர். சுமார் 50 கிலோ வரை வத்தல் மிளகாய் தீயில் போடப்பட்டது. ஆனால் தீயில் இருந்து எந்தவித நெடியும் வரவில்லை. கண் எரிச்சல் வரவில்லை. வத்தல் மிளகாய் மட்டும் எரிந்து சாம்பலானது.
இந்த திருவிழாவானது வருடத்திற்கு ஒருமுறை ஆடி மாதத்தில் நடைபெறும். விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் விழாக்குழு செய்திருந்தது.
செய்தி மற்றும் படங்கள்
புதியபுயல் முருகன்
மணவாளக்குறிச்சி
Tags:
District News